சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக் கூடங்களை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

சிறப்பு முகாம் எனும் பெயரில் ஈழச்சொந்தங்களை அடைத்துவைத்துள்ள சித்திரவதைக் கூடங்களை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக, 03-02-2024 அன்று, எம்.ஜி.ஆர். சிலை அருகில் சிறைச்சாலை முனை (ஜெயில் கார்னர்), திருச்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேவியர் குமார் படுகொலை: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

நாம் தமிழர் கட்சி ஒன்றிய தலைவர் சேவியர் குமார் அவர்களை கொடூரமாக தாக்கி படுகொலை செய்த திமுக ஒன்றிய செயலர் ரமேஷ் பாபு மற்றும் பாதிரியார் உட்பட அனைத்து கொலையாளிகளையும் கைது செய்து சிறைபடுத்தாமல் காலம் தாழ்த்தும் ஆளும் திமுக அரசை கண்டித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 26-01-2024 அன்று, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நாகர்கோவிலில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் உதவிப்பொருட்கள் வழங்கினார்!

மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை பெருவெள்ளத்தாலும், மழை வெள்ளத்தோடு தனியார் ஆலைகளில் இருந்து முறைகேடாக வெளியேற்றப்பட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகளாலும், எண்ணூர் கோரமண்டல் ஆலையில் அண்மையில் ஏற்பட்ட நச்சுக்காற்று கசிவினாலும், கடல் சார் சூழலியலில் ஏற்பட்ட சீர்கேட்டால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாலும் முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து கொடுந்துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

திருமுருகனுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

திருச்செந்தூரில் திருமுருகனுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி, ஐயா பெ.மணியரசன் மற்றும் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 14-06-2025 அன்று, திருசெந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது!

சாதிவாரி கணக்கெடுப்பும் சமூகநீதியும்! பஞ்சமர் நில மீட்பும்!! – சீமான் தலைமையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்!

தமிழ்நாடு அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், பஞ்சமர் நிலங்களை மீட்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 16-03-2025 அன்று, மாலை 04 மணியளவில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் மாபெரும் பேரணியை தொடர்த்து பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.